தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜூ, தொடர்ந்து பல தரமான படங்களைத் தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவரது தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய ராம் சரண் நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

அதற்கு முந்தைய ‘வாரிசு’ (விஜய்) தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் குறித்து சமீபத்திய பேட்டியில் தில் ராஜூ பேசும்போது, விஜய் சார் தனது ஷூட்டிங் நாட்களை சரியாக கணக்கிட்டு செயல்படுகிறார். ஆறுமாத காலக்கட்டத்தில் மாதம் 20 நாள்கள் உறுதி என பக்கா எழுத்துப்பூர்வ உறுதிமொழி கொடுக்கிறார்.
மற்ற கதாநாயகர்களும் இதேபோல் சரியாக திட்டமிட்டு பணியாற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை இல்லேயே… ஆனால் தெலுங்கில் இப்படி யாரும் நடந்துக்கொள்வது கிடையாது என கூறியுள்ளார்.