மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான சத்யன் அந்திக்காடு, தற்போது மோகன்லால் நடிப்பில் ஹிருதயபூர்வம் படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 28 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டீசரில், நடிகர் பஹத் பாசிலின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து சத்யன் அந்திக்காடு கூறியதாவது:
“பஹத் பாசிலை வைத்து நான் இந்தியன் பிரணயகதா, ஞான் பிரகாசம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளேன். நானும் அவரது தந்தை, இயக்குனர் பாசிலும் ஒரே காலத்தியவர்கள் என்பதால் ஆரம்பத்தில் பஹத் என்னை அங்கிள் என்று அழைப்பார்.
ஆனால் படத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியபோது என்னை இயல்பாகவே ஏட்டா (அண்ணன்) என்று அழைக்கத் தொடங்கினார். அந்த நேரம் முதல் எங்களுக்கிடையில் இருந்த வயது வித்தியாசம் மறைந்து, எதையும் சகஜமாகப் பேசி அவரிடமிருந்து சிறந்த வேலை வாங்க முடிந்தது” என தெரிவித்துள்ளார்.