நடிகர் யாஷ், தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

‘டாக்ஸிக்’ படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். KVN Productions நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. வெளியான சில நாட்களிலேயே டீசர் வைரலாக, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.‘அவதார்’ மற்றும் ‘எப்9’ போன்ற பிரபல ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் டைரக்டராக பணியாற்றிய ஜே.ஜே. பெர்ரி, ‘டாக்ஸிக்’ படத்திலும் ஆக்ஷன் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், அவர் நடிகர் யாஷை பாராட்டி ஒரு பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “என் நண்பர் யாஷுடன் ‘டாக்ஸிக்’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாம் செய்த வேலையை நினைத்துப் பார்த்தால் பெருமையாக உணர்கிறேன். எல்லோரும் இதைப் பார்க்கும் வரை காத்திருக்க முடியாது. இது ஒரு ‘BANGER’!”என்று குறிப்பிட்டுள்ளார்.