ஒரு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும் போது, அதை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவது சாதாரணமான நடைமுறையாக இருந்து வருகிறது. பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களே இப்படியாக மற்ற மொழிகளில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இம்முறை மராத்தி மொழியில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படம், தற்போது மலையாளத்தில் வெளியாக உள்ளது.

இதை நடிகை மிருணாள் தாகூர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், மராத்தி மொழித் திரைப்படம் வேறு ஒரு மொழியில் வெளியிடப்படுவது பெருமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மராத்தி சினிமா வரலாற்றில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மராத்தி திரைப்படமான ‘‘தசாவதார்’’ மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது. செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மராத்தி மொழியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை சுபோத் களோல்கர் இயக்கியுள்ளார். பிரியதர்ஷினி இந்தல்கர் மற்றும் சித்தார்த் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 21 ஆம் தேதி மலையாளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 
