வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் அவர்களின் மூத்த மகள் பிரீத்தா கணேஷ் மற்றும் லஷ்வின் குமாரின் திருமணத்தையொட்டி ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக மட்டும் சிறப்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது மட்டுமின்றி நடனம், இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்கி தனது மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.
