தமிழில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை என் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற வித்தியாசமான கதைக்கள படங்களை இயக்கி பிரபலமானவர் சிம்புதேவன்.

இவரது இயக்கத்தில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் வெளியான போட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது சிம்புதேவன், ஒரு மும்பை திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கதாநாயகனாக விமல் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.