Wednesday, January 15, 2025

ஜெயிலர் 2-ல் இணைகிறாரா விக்ரம் வேதா பட நாயகி? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த படம் ஜெயிலர். 650 கோடி வசூலித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை வெளியிட்டு அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்கள் என்றும், அதோடு சில புதிய முகங்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், ஜெயிலர் 2 படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தமிழில் ‘காற்று வெளியிடை’, ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது ‘ஆர்யன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News