நாகம், ஆடிவெள்ளி, துர்கா, செந்தூர தேவி, பாளையத்து அம்மன், கோட்டை மாரியம்மன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, மெர்சல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியான மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தை தயாரித்து வெளியிட்டனர். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெர்சல் படம் நஷ்டம் என சிலர் பேசுகிறார்களே என்கிற கேள்விக்கு பதிலளித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சிஇஓ ஹேமா, தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே மெர்சல் தான் பெருமைக்குரிய படம். மெர்சல் 2 படத்தை தயாரிக்கவும் நாங்க ரெடியா இருந்தோம். ஆனால், தளபதியின் டேட் தான் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி விமர்சனங்களை எல்லாம் கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றார்.
