Touring Talkies
100% Cinema

Friday, June 13, 2025

Touring Talkies

ஜனவரி 22ம் தேதி வெளியாகிறதா விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட முக்கிய அப்டேட்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியிடப்பட உள்ளது.

‘ஜனநாயகன்’ படத்தைத் தொடர்ந்து விஜய் முழுமையாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட உள்ளதால், இது அவரது கடைசி திரைப்படமாகும் என கூறப்படுகிறது. அதனால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் பாபி டியோல் நடிக்கிறார். மேலும் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப் படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ வீடியோவை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ வீடியோவும் அவர் பிறந்த நாளிலேயே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News