‘பசங்க’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘தலைவன் தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போதைய நிலையில் பிற தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படம் திரைக்கு வருவதற்குமுன்பே மீண்டும் விஜய் சேதுபதியுடன் இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.