‛நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி’ ஆகிய படங்களுக்கு பிறகு, விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் இணையும் புதிய படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அட்லியின் ‛ஏ பார் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது என தகவல் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் இருந்தபோது, விஜய் சேதுபதி பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். தற்போது பாலாஜி தரணிதரன் இந்தப் படத்திற்கான லொகேஷன்களை பார்வையிட்டு வருகிறார்.
விஜய் சேதுபதி தனது கால்ஷீட்டை நவம்பர் மாத இரண்டாம் வாரத்திற்கு பின் வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.