‘சேதுபதி’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அருண்குமார், விக்ரம் நடித்த 62-வது திரைப்படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை எச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது என்பதை படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. முதலில் இரண்டாவது பாகம் வெளியிடப்படவுள்ளது, பின்னர் முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘வீர தீர சூரன் 2’ படத்தில், விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ எனும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா காவல் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசி, மதுரை போன்ற இடங்களில் நடைபெற்றது.தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. சமீபத்தில் வெளியான டீசர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.