விஜய்யின் “தளபதி 69” என்ற அவரது கடைசி படத்தில் கதாபாத்திரம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதில், விஜய் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரியாக நடிக்கின்றார் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தை இயக்கி வருபவர் ஹெச்.வினோத் ஆவார். படத்தை கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரித்து வருகின்றது. படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துவருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.
“தளபதி 69” பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரி ஒருவர், ஒரு முக்கிய வழக்கின் காரணமாக மீண்டும் காவல்துறையில் சேர்ந்துகொள்கிறார் என்பதை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் இதற்கு முன் போக்கிரி, ஜில்லா, தெறி போன்ற படங்களில் காவலதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.