சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘கருப்பு’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது கடைசிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ‘‘லக்கி பாஸ்கர்’’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்துவருகிறார். ஹைதராபாத் நகரில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற தலைப்பு பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இதில்,
ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க, சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றன.