நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மற்றொரு புறம், ‘குபேரா’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இவற்றில் ‘குபேரா’ படம் ஜூன் மாதம் வெளியாவும் நிலையில், ‘இட்லி கடை’ படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இத்துடன் சேர்த்து, ‘போர் தொழில்’ பட இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ‘அறுவடை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றது. இதன் படப்பிடிப்பு முதலில் ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிடப்பட்டது. ஆனால் செட் அமைக்கும் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், படப்பிடிப்பை ஜூன் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கான செட் ஈ.வி.பி நகருக்கு எதிரே உள்ள 15 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.