Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சல்மான்கான் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதானா? கசிந்த புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என மூன்று வெற்றிப் படங்களையும் இயக்கினார். இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின. பிறகு, 2023ஆம் ஆண்டு வெளியான ஷாருக்கான் நடித்து வெளிவந்த ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இப்படம் உலகளவில் ரூ.1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தற்போது, அட்லீ தனது ஆறாவது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. பெயரிடப்படாத இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இது இரு முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்துக்காக ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனுடன் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகிய இரண்டு காலகட்டங்களில் உருவாகும் மறுபிறவி பற்றிய அதிரடி திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News