Wednesday, January 22, 2025

டிடி ரிட்டர்ன்ஸ் 2 இதுதான் கதையா? த்ரில்லரான சர்ப்ரைஸ் வைத்துள்ள படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சந்தானம், சுரபி நடித்த “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை எஸ். பிரேம் ஆனந்த் இயக்கினார். அதன் தொடர்ச்சியாக “டிடி நெக்ஸ்ட் லெவல்” என்ற புதிய படம் உருவாகியுள்ளது, இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.

செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவாளராக பணியாற்றி, ஆஃப்ரோ இசையமைப்பாளராக செயல்படுகிறார். இந்தப் படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரிக்கின்றனர். மே மாதம் படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் இயக்குநர் பிரேம் ஆனந்த் கூறியதாவது, “‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் வெற்றியின் பிறகு, அதன் தொடர்ச்சியாக அடுத்த பாகத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரே ஆண்டில் முடித்தோம். இந்தப் படமும் அனைவரையும் சிரித்து மகிழ வைக்கும். இதன் கதை சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறுகிறது.இதற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் செட் அமைத்தோம். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தை விட அதிக உற்சாகத்தை இந்த படம் வழங்கும்,” என்றார். சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News