‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிம்பு தனது 49வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் கல்லூரி பின்னணியை கொண்ட கதையாக உருவாகி வருகிறது. இதில் சிம்பு ஒரு கல்லூரி மாணவனாகவும், ரவுடியாகவும் நடித்திருக்கிறார். எனவே, இந்த படம் ஒரு காலேஜ் கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.

மேலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்காக, கடந்த சில ஆண்டுகளாக தனது தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொண்டிருந்த சிம்பு, தற்போது ‘தக்லைப்’ படத்திலும் அதே நீளமான முடியுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்திற்காக தனது தலைமுடி மற்றும் தாடியை முற்றிலும் சுருட்டி வெட்டி, இளமை நிறைந்த கல்லூரி மாணவனாக மாற உள்ளார் சிம்பு. மேலும், இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள பாடல் காட்சிகளில், புதிய நடன அசைவுகளையும் கொண்டு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.