இந்தியாவில் மிகப்பெரிய செல்வாக்குள்ள நடிகராக இருப்பவர் ஷாருக்கான் என்பதை அனைவரும் அறிந்ததே. அதேபோல், இந்தியாவின் பணக்கார நடிகைகளில் யார்யார் என்பதைக் கேட்டால், ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரின் பெயர்கள் முதலில் நம்மை வந்தடையும். ஆனால், இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை ஜூஹி சாவ்லா என்பதும் ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்று. இவர் ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர். ஹுருன் செல்வந்தர்கள் பட்டியல் – 2024 இத்தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ஜூஹிக்கு ரூ.4,600 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டில் ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்று பரபரப்பை ஏற்படுத்திய ஜூஹி சாவ்லா, சில ஆண்டுகளில் பாலிவுட் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி, பின்னர் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தார். 2010ஆம் ஆண்டு பிறகு, அவர் முக்கிய கதாபாத்திரங்களைவிட துணைக்கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் துவங்கினார். கடந்த வருடங்களாக பெரிய வெற்றி படங்கள் இல்லையென்றாலும், அவர் பணக்கார நடிகையாக இருப்பதற்கான காரணம், திரைப்படத் துறையைத் தாண்டி பல தொழில்களில் அவருடைய முதலீடுகளும், அவை ஏற்படுத்திய வருமானங்களும் தான் என சொல்லப்படுகிறது.
ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவத்தில் ஜூஹி சாவ்லா ஒரு பங்குதாரராக உள்ளார். இதற்கேற்ப, ரூ.9,150 கோடி மதிப்புடைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலீட்டிலும், ஜூஹி சாவ்லா ரூ.620 கோடி அளவுக்கு பங்குசேர்த்துள்ளார். இவ்வாறு தொழில்துறைகளில் செய்த நுட்பமான முதலீடுகள் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவை, அவரை இந்தியாவின் முதல் மிகப்பெரிய செல்வந்தர் ஆக்கி உள்ளது.