தென்னிந்தியாவின் மிக பணக்கார நடிகராக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளார் என்ற தகவலை முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.அவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 3,572 கோடி என கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் ‘சிவா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், 70-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘ரட்சகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிட்சயமாக உள்ளார். ரசிகர்களிடம் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். நாகார்ஜுனாவிற்கு அடுத்த வரிசையில் அதிக சொத்துக்கள் வைத்து இருக்கும் தென்னிந்திய நடிகராக சிரஞ்சீவி உள்ளார். இவரது சொத்துமதிப்பு ரூ.1,650 கோடியாகும்.நாகர்ஜுனாவிற்கு சினிமாவில் மட்டும் இன்றி அவர் வைத்துள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வருமானம் கொட்டுகிறது. ரியல் எஸ்டேட், அன்னபூர்னா ஸ்டூடியோஸ் உள்ளிட்டவை மூலமாகவும் நாகர்ஜுனாவிற்கு வருவாய் கிடைக்கிறது. நாகர்ஜுனாவிடம் சொந்தமாக ஒரு ஜெட் மற்றும் 6 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளனவாம்.
