இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், ஜானு சந்தர் இசையமைப்பில், நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி மற்றும் பாக்யஸ்ரீ போர்சே உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கும் ‘காந்தா’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. படக்குழு செப்டம்பர் 12ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இத்திரைப்படம் கருப்பு வெள்ளை (Black & White) காலத்தில் நடைபெறும் ஒரு கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு காலத்தைய புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் இடையே உருவான நட்பு மற்றும் மோதல் போன்றவற்றை டீஸர் காட்டுகிறது.
இந்த திரைப்படம் அந்த காலத்தில் நடைப்பெற்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்று கூறப்படுகிறது. இதையொட்டிய பாணியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘இருவர்’ திரைப்படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. அதில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.