2023ஆம் ஆண்டு, அஜய் பூபதி எழுதி இயக்கிய திகில் திரைப்படம் ‘செவ்வாய்கிழமை’ வெளியானது. இந்த படம் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மங்களவாரம், மங்களவார், செவ்வாய்கிழமை, சோவ்வாழ்ச்ச ஆகிய பெயர்களில் திரைக்கு வந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகை பாயல் ராஜ்புட் அழுத்தமான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு, அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்காத நிலையில், தற்போது அவரது அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘வெங்கடலட்சுமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை முனி எழுதி, இயக்கி, திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், இப்படம் தொடர்பான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.