தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம்’, ‘லவ்வர்’, ‘குட் நைட்’ போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் வெளியான லேபிள் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘குடும்பஸ்தன்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் புதிய படத்தில் மணிகண்டன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, தற்போது நடிகர் மணிகண்டனை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் தேசிங்கு பெரியசாமி தற்போது சிம்புவின் 50-வது படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.