Saturday, November 9, 2024

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்-க்கு இப்படியொரு பிரச்சினையா? ஓ மை காட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர், பல ஆண்டுகளாக இணை தயாரிப்பாளராகவும் துணை நடிகராகவும் செயல்பட்டு வந்தார். இவர் உதவி இயக்குநராக ‘சலாம் இ இஷ்க்’ என்ற படத்தில் பணியாற்றிய நிலையில், 2012-ல் வெளியான ‘Ishaqzaade’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து ‘Aurangzeb,’ ‘Gunday,’ ‘2 States’ போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்த அர்ஜுன் கபூர், தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்வு செய்து வந்தார். தற்போது, இவர் வில்லனாக நடித்துள்ள ‘சிங்கம் அகெய்ன்’ படம் வெளியானதும் பெரும் வரவேற்பையும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது.

சமீபத்திய பேட்டியில் அர்ஜுன் கபூர், தனக்கு ஹாஷிமோட்டோ நோய் இருப்பதாகவும் இது தைராய்டு சிக்கலுடன் தொடர்புடையது என்றும் குறிப்பிட்டுள்ளார். நோய் பாதிப்பின் போது ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கூறியதுடன், சினிமா துறையில் இது சாத்தியமில்லை என்கிறார்.

- Advertisement -

Read more

Local News