தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பிரமோஷன் நிகழ்வுகளில் சிம்ரன் அதிகமாக பங்கேற்கவில்லை. அதன் காரணம், அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்தார் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அந்த நிகழ்ச்சிக்கு சிம்ரன் வருகைதந்தபோது, அவருடன் டிவி நடிகை ஆனந்தியும் வந்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆனந்தி, சிம்ரனுக்கு மேனேஜராகவும், நெருங்கிய தோழியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.