Tuesday, January 21, 2025

காந்தாரா 2ம் பாகத்தின் படப்பிடிப்புக்கு சிக்கல்லா? வெளியான பரபரப்பு தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளிவந்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை “காந்தாரா – சாப்டர் 1” எனும் பெயரில் ப்ரிகுவலாக உருவாக்கி வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தின் கவிகுட்டா பகுதியில் உள்ள ஹெரூர் என்ற கிராமத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது வெடிப்பொருட்களைப் பயன்படுத்தியதால், படக்குழுவினரும் கிராமவாசிகளும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் பல காட்டு விலங்குகள் உள்ளதால், வெடி வெடிக்கும்போது அவை பாதிக்கப்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், படக்குழுவினர் காட்டு மரங்களை வெட்டியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தக் கூறியுள்ளார். இளம் கிராமவாசி ஒருவரையும் படக்குழுவினர் தாக்கியதாகவும் தகவல் வெளியானது. இதனால், கிராம மக்கள் படக்குழுவினர் மீது கடும் கோபம் வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, எசலூர் காவல் நிலையத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் தக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News