இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கிய அனுமான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்குப் பின்னர், அதன் தொடர்ச்சியாக ஜெய் அனுமான் என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இதில் அனுமான் கதாபாத்திரத்தில் காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், இந்நிலையில், இப்படத்துக்கு சட்ட ரீதியான சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஜெய் அனுமான் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கறிஞர் திருமலா ராவ், நம்பப்பள்ளி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, சமீபத்தில் வெளியான ஜெய் அனுமான் போஸ்டரில் அனுமான் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஜெய் அனுமான் படக் குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.இச்சிக்கலுக்கு பதிலளிக்கும் வகையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் இதுவரை எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.