நடிகர் ஜீவா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது சிம்பு குறித்த கேள்விக்கு, எனக்கும் சிம்புவுக்கும் சண்டை என பல வருடங்களுக்கு முன்பு சில பத்திரிகைகள் கொளுத்திப்போட்டது. அப்போதே அப்படியெல்லாம் இல்லை என வெளிநாட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக இணைந்து மேடையில் அறிவித்து நடனம் எல்லாம் ஆடினோம். சிம்புவும் நானும் தி நகரில் ஒரே தெருவில் தான் வசித்து வந்தோம். இருவரும் நல்ல நண்பர்கள் எனக் கூறினார். கெட்டவனுக்கு கெட்டவன்: சிம்பு எனக்குப் போட்டியா என்கிற கேள்விக்கு கூடவே இருக்கும் நண்பன் முதுகில் குத்தினால் எப்படி இருக்கும் என பேசியதை அப்படியே திரித்து பிரச்சனையை பெரிதாக்கி விட்டனர் என்று பேசிய ஜீவா, நீங்க அவ்ளோ சாஃப்ட்டான பெர்சனா என தொகுப்பாளினி கேட்டதும் அப்படியெல்லாம் இல்லை நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என சொல்லிவிட்டார் ஜீவா.
