பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சிகந்தர் படம் வரும் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் கலந்து வருகிறார். அவ்வாறு கலந்து கொள்ளும்போது சல்மான் கான் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கிறது. ரூ.34 லட்சம் மதிப்பிலான எபிக் எக்ஸ் ராம் ஜென்மபூமி டைட்டானியம் 2 ரக கடிகாரத்தை அவர் கையில் அணிந்திருக்கிறார். மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இக்கடிகாரம் ராம ஜென்மபூமியின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமான வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கடிகாரம், ராம ஜென்மபூமி மற்றும் இந்திய வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவத்துடன் தொடர்புடைய கூறுகளைக் காட்டும் வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.
