நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தின் முதல் பாகம் 2026ஆம் ஆண்டு தீபாவளிக்கு, இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த இரண்டு பாகங்களுக்குமான மொத்த தயாரிப்பு செலவு ரூ.4000 கோடியை தொடும் எனத் தெரிவித்துள்ளார். இது இந்திய திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்துக்கும் செலவிடப்படாத அளவுக்கு பெரிய பட்ஜெட் ஆகும்.

இந்தியாவின் இரு முக்கிய புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படமாக வடிவமைப்பது குறித்த முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கு முந்தைய காலகட்டங்களிலும் பல இயக்குநர்கள் இந்த கதைகளை திரைப்படங்களாக உருவாக்கியுள்ளனர். ‘ராமாயணா’ திரைப்படத்தின் ரூ.4000 கோடி பட்ஜெட் தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் உருவாக்கியுள்ளது.