அட்லி தமிழ் சினிமாவில் விஜய்யுடன் மூன்று படங்களை இயக்கியதைத் தொடர்ந்து, முன்னணி இயக்குநர்களில் ஒருவர் என்ற இடத்தைப் பெற்றவர். 2023 ஆம் ஆண்டில் ஷாரூக்கான் நடிப்பில் அவரால் இயக்கப்பட்ட ‘ஜவான்’ என்ற ஹிந்தி படம் வெளியானது. இந்தப் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்ததன் மூலம், இந்திய அளவில் பேசப்படும் பிரபலமான இயக்குநராக அட்லி உருவெடுத்தார்.

அடுத்து அட்லி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கப்போவது சல்மான் கானா, அல்லு அர்ஜுனா என்ற கருத்து ரசிகர்களிடையே இருந்தது. தற்போது கிடைத்த தகவலின்படி, அந்த படத்தில் அல்லு அர்ஜுன் தான் நடிக்கிறார் என உறுதியாக கூறப்படுகிறது.
இந்த புதிய திரைப்படத்திற்கான கதை விவாதம் மற்றும் முன்தயாரிப்பு பணிகள் துபாயில் நடந்து கொண்டிருக்கின்றன. அங்குள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஓட்டலில், அட்லி தனது குழுவுடன் சேர்ந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதே ஓட்டலில் அல்லு அர்ஜுனும் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்டமாக நடைபெறும் இந்த ஆலோசனை விரைவில் முடிவடைந்து, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.