Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

ரீ ரிலீஸாகிறதா கரகாட்டக்காரன் திரைப்படம்? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1989-ஆம் ஆண்டு, இயக்குநர் கங்கை அமரனின் இயக்கத்தில் ராமராஜன் மற்றும் கனகா நடித்த படம் தான் கரகாட்டக்காரன். இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் கிளாசிக் படமாக மாறியது. இதில் கோவை சரளா, சண்முகசுந்தரம், காந்திமதி, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த பாடல்கள் இன்று வரை மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. மாங்குயிலே, இந்த மான், குடகுமலை, மாரியம்மா, முந்தி முந்தி, ஊருவிட்டு ஊரு வந்து போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த காலம் இன்னும் மறக்க முடியாத ஒன்று.

இந்த படம், ரூ. 35 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது 450 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, ரூ. 5 கோடிக்கு மேல் வசூலித்த பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. குறிப்பாக கவுண்டமணி – செந்தில் ஜோடியின் வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பன சுந்தரி கார் காட்சிகள் இன்று வரை சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக பரவி வருகின்றன.

இந்த படம் வெளியானதற்கு 36 ஆண்டுகள் ஆகிய நிலையில், கடந்த ஆண்டு இயக்குநர் கங்கை அமரன் இதற்கான இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஆனால் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த ராமராஜன், இரண்டாம் பாகத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்வம் இல்லையெனவும், அந்த படத்தை அப்படியே இடையறாத பொக்கிஷமாக விட்டுவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்ற ராமராஜன், “இன்று இளையராஜா அண்ணனின் பிறந்தநாள். ஜூன் 2ம் தேதி அவரது பிறந்தநாள். ஜூன் 16ம் தேதி கரகாட்டக்காரன் படத்துக்குப் பிறந்தநாள். இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்,” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News