விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘மகாராஜா’. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வசூலை பெற்றது.

‘மகாராஜா’ படம் சீன மொழியிலும் வெளியிடப்பட்டு, அங்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச ரீதியிலும் கவனத்தை பெற்றது. மேலும், இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு உலகம் முழுவதிலிருந்தும் பலரும் பாராட்டுகளும், விமர்சனங்களும் தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘மகாராஜா’ பட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் நிதிலன் சாமிநாதன் மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.