தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலையா. அவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு, போயபதி சீனு இயக்கத்தில் வெளிவந்த ‘அகண்டா’ திரைப்படத்தில் பாலையா நடித்தார். இந்தப் படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்தப் படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் காரணமாக, இப்போது ‘அகண்டா 2’ உருவாகி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததோடு, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவே இரண்டாம் பாகத்திலும் பணியாற்றி வருகின்றனர். இசையமைப்பாளராக தமன் தொடர்ந்து பணிபுரிகிறார்.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் வில்லனாக ஆதி நடிக்க உள்ளதாக தகவல் இருந்த நிலையில், தற்போது ‘கே.ஜி.எப்’, ‘லியோ’ போன்ற திரைப்படங்களில் நடித்த சஞ்சய் தத் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.