இந்த வருடம் வெளியான படங்களில் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி, நல்ல வரவேற்பையும் லாபத்தையும் பெற்ற படமாக ‘குடும்பஸ்தன்’ அமைந்தது. ராஜேஸ்வர் காளிசாமி இப்படத்தை இயக்க, மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தும் ‘குடும்பஸ்தன்’ படத்தை தயாரித்த சினிமாகாரன் நிறுவனம், அதே இயக்குநருடன் இன்னொரு புதிய படத்தை உருவாக்க உள்ளதாகவும், மணிகண்டனை வைத்து இன்னொரு படத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு ‘குடும்பஸ்தன் 2’ உருவாக வாய்ப்பும் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மணிகண்டன் எழுத்துப் புலமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர். அவர் ஒரு எழுத்தாளராக இருப்பதனால், தான் நடிக்கும் படங்களில் கதையின் விவாதங்களிலும், வசனத் தொகுப்புகளிலும் நேரடியாக பங்கேற்று பணியாற்றுகிறார். ஏற்கனவே ‘விஸ்வாசம்’, ‘விக்ரம் வேதா’, ‘தம்பி’ ஆகிய படங்களுக்கு வசனங்களை எழுதிய அனுபவம் அவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.