கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான ‘நான் ஈ’ புகழ் சுதீப், தனது 47வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை, கடந்த வருடம் சுதீப் நடித்த மற்றும் வெற்றி பெற்ற ‘மேக்ஸ்’ படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயா இயக்க இருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான சேரன் இயக்குவதாக தகவல்கள் வெளிவந்தன. இந்தப் படத்தை, தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு வருடங்களுக்கு முன்பு, சுதீப்பின் பிறந்தநாளில் வெளியானது.
இந்நிலையில், சில காரணங்களால் சேரன் மற்றும் சுதீப் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால், சுதீப்பின் புதிய படத்தை இயக்க விஜய் கார்த்திகேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போது சுதீப் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ என்ற புதிய கன்னடப் படத்தில் நடித்து வருகிறார்.