Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

காஞ்சனா 4ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா தளபதி 69 பட கதாநாயகி? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 2015ஆம் ஆண்டில் ‘காஞ்சனா 2’, 2019ஆம் ஆண்டில் ‘காஞ்சனா 3’ ஆகிய படங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர்-காமெடி வகையைச் சேர்ந்த இந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய வெற்றியினைப் பெற்றன.

சமீபத்தில் வெளியான ‘சந்திரமுகி-2’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களைத் தொடர்ந்து, தற்போது ராகவா லாரன்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘காஞ்சனா 4’ படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘காஞ்சனா 4’ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பேய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News