ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், தமிழகத்தில் அதன் முதல் காட்சி எப்போது நடைபெறும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது, அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படாத சூழலில், தமிழகத்தில் இந்த படம் காலை 9 மணிக்குப் பிறகு மட்டுமே திரையிடப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 900 திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி 20 நிமிடங்கள் என்பதால், கூடுதல் சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யலாமா என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.