Tuesday, December 17, 2024

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரை இயக்குகிறாரா ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி சிதம்பரம் இயக்கத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளிலிருந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. உலகளவில் இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும்சிறந்த அங்கீகாரத்தை பெற்றது. இதில் சௌபின் சாஹிர், ஸ்ரீனாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ்நாட்டு மக்களிடையே இப்படம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இப்படம் 242 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிதம்பரம், விக்ரமுடன் ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாகவும், மேலும் இந்தி மொழியில் ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் பரவின. ஆனால் இதுவரை இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில், சிதம்பரம் நடிகர் அனில் கபூரை வைத்து ஒரு விளம்பர படத்தை இயக்கி வருகிறார். அந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News