Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

விஜய் தேவராகொண்டாவின் அடுத்த படத்தை இயக்குகிறாரா கில் பட இயக்குனர்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘கில்’படத்தை இயக்கிய நிகில் நாகேஷ் பட் அடுத்ததாக ராம் சரணை வைத்து புராண படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இயக்குனர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இது, பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இருப்பினும், தற்போது விஜய் தேவரகொண்டாவை இவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், சமீபத்தில் ஐதராபாத் சென்று விஜய் தேவரகொண்டாவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

NEW YORK, NEW YORK – JUNE 13: Nikhil Nagesh Bhat attends “Kill” Premiere during the 2024 Tribeca Festival at AMC 19th Street on June 13, 2024 in New York City. (Photo by John Lamparski/Getty Images for Tribeca Festival)

இதற்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடித்த பாலிவுட் படமான ‘லிகர்’படத்தை கரண் ஜோஹர் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News