தமிழ் திரையுலகை தொடக்கமாகக் கொண்டு தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமன்னா, பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது அவர் நடித்துள்ள ‘ஒடேலா 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. அத்துடன், அஜய் தேவ்கனின் ‘ரெய்டு 2’ திரைப்படத்துக்காக ஒரு பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளார்.
இந்நிலையில், 2005-ம் ஆண்டு சல்மான் கான் நடித்த ‘நோ என்ட்ரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தமன்னா கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிதி ராவ், ஷ்ரத்தா கபூர், மனுஷி சில்லர் மற்றும் பிருத்விராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர் என கூறப்படுகிறது. இந்தத் தகவலுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.