Tuesday, October 8, 2024

சூர்யா 45 டீம் ரெடியா? ஆர்.ஜே.பாலாஜி போட்ட பதிவால் ரசிகர்கள் உற்சாகம்! #SURIYA45

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யா 44 திரைப்படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நேரத்தில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டைக் கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார், இதற்கான வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பதற்கு முன், சூர்யா நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது டீம் என குறிப்பிட்டு பின்னணியில் ஏ.ஆர்.ரகுமான் இசையை வைத்துள்ளார். இது சூர்யா 45 படத்திற்கான சிக்னல் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தின் இசையமைப்பை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார் என்று செய்திகள் பரவுகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள விவரமும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News