தெலுங்கு நடிகர் ரவி தேஜா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும், கடந்த சில வருடங்களில் அவர் நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளன. இந்த நிலையில், இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ரவி தேஜாவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளாராம். இந்த கதை ரவி தேஜாவுக்கு மிகவும் பிடித்திருந்ததால், விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படம் உருவாகும் என்று தெரிகிறது.

சுந்தர்.சி தற்போது நயன்தாராவை கொண்டு “மூக்குத்தி அம்மன் 2” படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்தவுடன், அவர் ரவி தேஜாவுடன் ஒரு புதிய படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது மட்டுமின்றி இந்தாண்டு முதல் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் சுந்தர் சி தெலுங்கு நடிகரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க போகிறார் என்ற தகவல்கள் ரசிகர்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேபோல் சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் உருவான கேங்கர்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.