இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் கதையாக உருவாகும் அரசன் திரைப்படத்தின் புரோமோ நாளை (அக்.16) மாலை 6 மணிக்கு சில குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்று வருவதால் சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில், இந்த புரோமோ 5 நிமிடம் கால நேரம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடசென்னை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இந்த புரோமோவில் இடம்பெற உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
