நடிகர் விஜய், 69வது படமாக, “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, பாபி டியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பனையூரில் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.இதற்கு முன்பு, ஸ்ருதிஹாசன், விஜய்யுடன் “புலி” படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.