பாலிவுட் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் ஈஷா குப்தா, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில் இருந்ததாக கடந்த காலத்தில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து ஈஷா குப்தா அளித்த பேட்டியில், “2018-ம் ஆண்டு ஒரு விருந்தில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். அதன் பின்னர் இருவரும் இரண்டு மாதங்கள் தொடர்பில் இருந்தோம். ஆனால், அதை டேட்டிங் என அழைக்க முடியாது. அதாவது, நாங்கள் டேட்டிங் கட்டத்திற்கு வருவதற்குள் முன்பே எங்கள் பழக்கம் முடிவடைந்துவிட்டது.

எனவே, அது ஒரு காதல் உறவாக இருக்க முடியாது. நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளவில்லை என்பதை உணர்ந்தோம். அதன்பின்னர், அவர் என்னுடைய வாழ்க்கையில் அவர் இல்லை என்பதை நான் தெளிவாக உணர்ந்தேன் என தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான் கோவிக்குடன் கடந்த 2020-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார். இருப்பினும், கருத்து வேறுபாடுகளினால் இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.