பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கான், தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் ‘கிங்’ எனும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் ஷாருக்கான் பங்கேற்று வருகிறார்.

அவர் நடித்துள்ள காட்சிகள் மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் படம் பிடிக்கப்பட்டன. ஒரு ஆக்ஷன் காட்சி படமாக்கும் போது, ஷாருக்கானுக்கு தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தின் தன்மை குறித்து விரிவான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஷாருக்கானுக்கு சமீபத்தில் படப்பிடிப்புகள் நடைபெறும் போதும், தொடர்ந்து தசைபிடிப்புகளில் காயங்கள் ஏற்பட்டு வருகின்றன, என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ள காயம் கடுமையானது அல்ல என்றாலும், முழுமையான சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டியதுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன