2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த ‘தெறி’ படம் தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. அட்லியின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘பேபி ஜான்’ என பெயர் வைத்துள்ளனர். இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காளீஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் பல கட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கான், அட்லியின் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார், இந்த நட்பின் அடிப்படையில், அவர் ‘பேபி ஜான்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.