தமிழில் 1992ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்ணாமலை’.

இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் திரை வாழ்வில் மிக முக்கியமான மைக்கல் ஆக அமைந்தது. ‘அண்ணாமலை’ படத்தின் வெற்றியால், அவரது திரை பயணத்தை அந்த படத்துக்கு முன் மற்றும் பின் எனப் பிரித்துப் பேசும் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்போது, சுமார் 32 ஆண்டுகள் கழித்து, ‘அண்ணாமலை’ திரைப்படம் 4K தரத்தில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரீ-ரிலீஸ், ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.