ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளா பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
தற்போது படப்பிடிப்பில் இருந்து இடைவெளி எடுத்திருக்கும் ரஜினிகாந்த், நாளை ‘கூலி’ திரைப்பட விழாவை முடித்த பின்னர், வரும் வாரம் மீண்டும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புக்காக கேரளா மாநிலத்துக்குச் செல்ல உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான சமயத்தில், ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்க கேரளாவில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது.